ஈழத் தமிழர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அஸ்திரம் மட்டும் இப்போது கையில் கிடைக்குமானால்.......நிச்சயம் கிடைக்கும். நாம் முடிந்தால் முடியாதது உலகில் இல்லை! சுந்தரபாண்டியன் வழியில் சென்று முயன்று பார்ப்போம்.
சொற்ப வீரர்களை மட்டுமே கொண்ட சோழ சிற்றரசின் இளவரசனுக்கு, படைதிரட்டக் கூட அனுமதி இல்லாத பாண்டியனுக்கு, இது எப்படி சாத்தியம் ஆயிற்று?
தன் நிறை, குறை எதிரியின் பலம், பலவீனம், நட்பு வட்டம் என பிரச்சினை ஒவ்வொன்றையும் அவன் அறிவுபூர்வமாக ஆராய்ந்து வள்ளுவர் காட்டிய அறம், பொருள் வழியில் அதற்கு பரிகாரம் கண்டதுதான் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருக்கும் இரகசியமாகும்.
அவன் வழியிலேயே இப்போதைய தமிழ் ஈழத்தின் அடிப்படை பிரச்சினைகளை ஆராய்வோம். முதலில் ஏன் இந்த யுத்தம் என்பதைப் பார்ப்போம்.
மொழியியல் வல்லுனர்கள் உலகில் பேசப்படும் அத்தனை மொழிகளையும் பத்து மொழிக்குடும்பங்களாகப் பகுத்து அவற்றை வகைப்படுத்தி உள்ளனர். ஒரு தனி மரத்திலிருந்து பல கிளைகளாகப் பிரிந்து வந்து, விழுதுகளாக இன்று வேர்விட்டு நிற்கும் பல மொழிகளுக்கும் ஆதியில் ஆணிவேராகத் திகழ்ந்த அந்த பத்து தாய்மொழிகளைப் பற்றியும் ஆராய்ந்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
1. இந்தோ-ஐரோப்பியன்,
2. திராவிடம்,
3. மலேயோ-பாலினேசியன்
என்ற மூன்று மட்டும் அந்த பத்து மொழிக் குடும்பங்களில் நமக்கு இப்போது முக்கியமானவைகள். அவைகளைப் பற்றி இப்போது ஒவொன்றாகப் பார்ப்போம்.
இந்த மூன்றிலும் இந்தோ-ஐரோப்பியன் மொழிகள்தான் உலகின் 47% மக்களால் பேசப்படுகிறது. இந்த மொழிக் குடும்பத்தில் 8 உட்பிரிவுகள் உள்ளன.
அ) இந்தோ-ஈரானியன்: இந்த உட்பிரிவில், பார்சி, பாலுசி, பெங்காலி, ஒரியா, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, மற்றும் சிங்களம் போன்ற மொழிகள் அடங்கும்.
ஆ) ஜெர்மானிக்: என்ற இந்த உட்பிரிவில் டேனிஷ், டச்சு, ஆங்கிலம், நார்வெ, ஸ்வீடிஷ், ஜெர்மன், போன்ற மொழிகளும்
இ) ரோமன்ஸ்: ரோமானியர்களின் மொழியாகிய இந்த லத்தீன் உட்பிரிவில் பிரெஞ்சு, இத்தாலியன், போர்துக்கீஸ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளும் அடங்கும்.
ஈ) பால்டொ-ஸ்லாவிக்: ரஷ்யன், ஸ்லோவாக், போலிஷ், பல்கேரியன், செக், லாட்வியன், செர்போ-குரோசியன் போன்றவை இந்த உட்பிரிவில் அடங்கும். மற்ற நான்கு உட்பிரிவுகள் அல்பேனியன், ஆர்மேனியன், கிரீக் மற்றும் செல்டிக் ஆகும்.
இரண்டாவது மொழிக்குடும்பமான திராவிட குடும்பத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் உலகின் 4% மக்களால் பேசப்படுகின்றது.
மலேயோ-பாலினேசியன் மொழிக் குடும்பத்தில் மலெசியா, இந்தோனேசியா, பிலிபைன்ஸ், நியூஜிலாந்து, மடகாஸ்கர் போன்ற மொழிகள் உலகின் 5% மக்களால் பேசப்படுகின்றது.
வட இந்திய மொழிகளும் சிங்களமும் ஒரே மொழிக் குடும்பத்தில் ஒரே உட்பிரிவின் கீழ் வரும் மொழிகளாகும். அதனால் தான் வட இந்தியர்களும், வட இந்திய பத்திரிகைகளும் தமிழ் ஈழ யுத்தத்தை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப் போனால் சிங்களர்களுக்கு முழு ஆதரவான நிலைதான் அங்கு. தென்னிந்திவிலும் தமிழர்கள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். தமிழத்திலும் கூட, திரவிடர்களும் திராவிட ஆதரவு பத்திரிகைகள் மட்டுமே ஈழத் தமிழர்கள் ஆதரவு நிலை எடுத்துள்ளன. தமிழில் மற்ற பத்திரிகைகள் சிங்களர்களுக்கு ஆதரவாக செயல்படும் சூட்சமம் இதுதான். கலங்காலமாய் போரிட்டு வரும் இரண்டு வேறுபட்ட இனங்கள், ஒரு இன ஆட்சியின் கீழ் வாழ்வது சாத்தியம் இல்லை என்பது தெரிந்தும் ஆங்கிலேயர்கள் இரண்டு இனங்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டுச் செல்லாமல் சிங்களர்களிடம் ஒப்படைத்துச் சென்ற இரகசியமும் இதுதான். ஐரோப்பாவில் நடந்த யுத்தங்களின் பின்னனியை ஆராய்ந்தால் ஜெர்மானிக், ரோமன்ஸ், ஸ்லாவிக் என்ற மூன்று இனங்களுக்கு இடையே தான் பெரும்பாலான யுத்தங்கள் நடந்துள்ளன என்பது தெரிய வரும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு அடிப்படை உண்மை, இனம் இனத்தோடுதான் சேரும், சேரவேண்டும் என்பதுதான்.
மேலும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
1945 - இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த காலகட்டம் அது. உலகெங்கும் காலனி அரசுகளின் கட்டமைப்பு ஆட்டங்கண்டு விட்டன. எனவே 1945 லிருந்து 1960 ம் ஆண்டு வரையான காலத்தில் உலகெங்கும் இந்தியா உட்பட சுமார் 180 நாடுகள் காலனி ஆதிக்கத்தின் பிடியிலிருந்தது விடுபட்டுச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின.
பெரும்பாலான நாடுகள் தங்கள் பாரம்பரிய மொழி இன அடிப்படையிலும், காலனி நாடுகள் ஆண்ட பகுதிகள் என்ற அடிப்படையிலும் சுதந்திர நாடுகள் உருவாயின. பின்னர், பக்கத்துப் பிரதேசங்களும் சுதந்திரம் பெற்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு உருமாறின.
இப்போது மலேயோ–பாலினேசியன் மொழிக்குடும்பத்துக்கு வருவோம்.
டச்சுக்காரர்களிடமிருந்து இந்தோனேசியா 1949ல் சுதந்திரம் அடைந்தது. மலேயோ–பாலினேசியன் மொழிகளில் ஒன்றான 'போஹ்ரா இந்தோனேசியா', இந்தோனேசியாவின் ஆட்சி மொழி ஆயிற்று.
பிரிட்டிஷாரிடமிருந்து 1957ல் மலேயா சுதந்திரம் அடைந்தது. அக்குடும்த்தின் மற்றொறு மொழியான போஹ்ரா மலேசியா, மலேயாவின் ஆட்சி மொழி ஆனது.
ஆனால் மலேயாத் தீவுக்கூட்டங்களில் ஒன்றான போர்னியோத் தீவின் வடபகுதியில் இருந்த சராவாக், சபா மாகாணங்கள் பிரிட்டிஷார் வசம்தான் இருந்தன. அத்தீவின் தென்பகுதி டச்சுக்காரர்களிடம் இருந்ததால் அப்பகுதி இந்தோனேசிய ஆதிக்கத்தில் ஏற்கனவே வந்துவிட்டது.
சராவக், சபா மாகாணங்கள் எப்படி இயங்குவது என்ற கேள்வி எழுந்தது. அப்போதைய மலேயப் பிரதமர் துங்க அப்துல் ரஹ்மான் மலேயா தீபகற்பத்திலிருந்து கடலில் 650 கி.மீ தள்ளி போர்னியோதீவு இருந்தாலும் அந்த இரண்டு மாகாணங்களிலும் போஹ்ரா மலேசிய மொழி வழக்கத்திலிருப்பதைக் காரணம் காட்டி, மலேயாவுடன் இணைக்க வற்புறுத்தினார்.
இந்தோனேசியாவோ ஒன்றுபட்ட போர்னியோ என்ற கோஷத்துடன் தங்களிடம் இணையவேண்டும் என்றது. கடைசியில் பிரிட்டன் இரண்டு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி 80 சதம் மக்கள் மலேயாவுடன் இணைய விருப்பம் தெரிவித்ததன் பேரில் மலேயாவுடன் 1963ல் இணைந்து மலேசியா என்ற நாடாக மலர்ந்தது. ஆனால் இலங்கையில் நடந்தது என்ன? அங்கிருந்த ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து கடைசிவரை கேட்டறியப்படவே இல்லை.
இன்றைய தமிழ் ஈழ சிக்கலுக்கான மூல காரணம் இதுதான். இந்த பின்னனியில் இப்போது தமிழ் ஈழப் பிரச்சினைக்கு வருவோம். சமீபத்தில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அரசின் உயரதிகாரிகளைச் சந்திக்க புதுடில்லி வந்திருந்த இலங்கை எம்.பி சிவலிங்கம் அவர்கள் தமிழ் ஈழ மக்களின் கருத்துக்களை அறிய ஐ. நா ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்றார். இதுதான் சரியான அணுகு முறை. பிரச்சினையின் முடிவுக்கு ஒரே தீர்வு.

ஆனால் அந்த ஓட்டெடுப்பின் அடிப்படை விஷயம் என்னவாக இருக்க வேண்டும்? அதுதான் தீர்மனிக்கப்பட வேண்டும். அந்த விஷயம் ஒட்டுமொத்த சிங்களர்களின் சப்த நாடிகளையும் ஒடுக்குவதாக இருக்கவேண்டும். அதிபர் ராஜபக்சே வெல்லவே முடியாத அலெக்சாண்டர் அல்ல என்பதையும் நாம் நிரூபிக்க வேண்டும். தன் நாட்டு அப்பாவி மக்கள் மீது இரசாயணக் குண்டுகளை வீசியவரை எப்படி மகா அலெக்சாண்டருடன் ஒப்பிட முடியும்?
இந்த அதர்ம யுத்தத்தை புலிகள் நடத்த விரும்பியிருந்தால், தமிழ் ஈழம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே மலர்ந்திருக்கும். ஆனால் வரலாறு புலிகளை மன்னித்திருக்காது. இப்போது தர்ம யுத்தத்தில்தானே புலிகள் தோற்றிருக்கிறார்கள். தர்மயுத்தம் தோற்றதாக வரலாறு கிடையாது. வரலாறு திரும்பும். ஆனால் அதிபர் ராஜபக்சேவை இரண்டாவது ஹிட்லராகத்தான் மனிதகுலம் இனிப் பார்க்கும்!
ராஜபக்சே தர்பாருக்கு முடிவுரை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
2 comments:
வேதம் ஓதுவதை இன்னும்தான் புலிகள் கைவிடவில்லை. புலிகளுக்காக வேதம் ஓதுபவர்களும் இன்னும் சொற்ப நாட்களுக்குள் அடங்கிப்போவார்கள். ‘ஆடு நனையுதென்று தமிழ்நாட்டு ஓநாய்கள் அழுவது’ தேர்தல் முடியும்வரைதான்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்று கூறியிருக்கிறது. சர்வதேச சமூகமும் புலிகளின் திருவிளையாடல்களை நன்கு அறிந்துள்ளனர். இந்நிலையிலும் புலிகளும், புலிப்பினாமிகளும் இன்னமும் தாம் தமிழ் மக்களுக்காக போராடுவது என்று சொல்லிக்கொள்வது கேவலம். கேவலத்திலும் கேவலம்.
புலிகளின் வியாக்கியானங்கள் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். புலன் பெயர்ந்தவர்களும் தமது உறவுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு அதுவே போதுமானது. தமிழீழம் - தலைவர் எல்லாம் சும்மா என்றாகிவிடும். ஏனெனில் ‘மோட்கேஜ்’ பிள்ளைகளின் படிப்பு என அவர்களுக்கு தலைக்குமேல பிரச்சினை.
சுந்தரபாண்டியன் போல படை நடத்த பிரபாகரன் தயாராக இருந்தாலும், அவர்கள் முற்காலத்தில் செய்த வினை இப்பொழுது இந்தியா தன் கரம்தனைக் கொடுக்க யோசிக்க வைக்கிறது.
தனி ஈழம் பிரச்சினைகளைத் தீர்க்கும் என சொல்ல முடியாவிட்டாலும் உயிர்க் கொலைகள் குறையும் என்பதால் அது நடந்தே தீர வேண்டும்.
உங்கள் எழுத்து பல வரலாற்று உண்மைகளை எனக்கு சொல்லியது. அதற்கு மிக்க நன்றி.
--சங்கரநாராயணன்
Post a Comment