Showing posts with label அண்டம். Show all posts
Showing posts with label அண்டம். Show all posts

Sunday, October 26, 2008

அண்டம் - உட்கூறியல் (Anatomy of the Universe)

ண்டம் என்பது சின்னஞ் சிறிய நுண்துகள்களிலிருந்து மிகப்பெரிய விண்மீன் கூட்டங்கள் (Galactic Super cluster) வரை அடங்கும். வானவியலார் சுமார் 10,000 கோடி விண்மீன் கூட்டங்கள் (Galaxy) அண்டத்தில் மிதப்பதாகவும், ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திலும் சுமார் 10,000 கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

அண்டம் உருவாக்கத்திற்கு அறிவியலர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெருவெடிப்பு அல்லது பெரும்பிரளயம் (Big Bang) என்பதாகும். பெருவெடிப்பு நிகழ்வுக்குப்பின் அந்தக் காலகட்டத்தில் அண்டம் என்பது 10000 டிகிரி உயர் வெப்ப நிலையில் வெறும் வாயுக்களாலான ஒரு பெரிய தீக்கோளமாகும். அது விரிந்து பரவி பரவி குளிரும் தன்மை உடையதாய் இருந்தது. வெப்பம் தணியத் தொடங்கியதும் முதலில் அணுக்கருவின் நுண்துகள் உருவாகி அதன் பின்னர் புரோட்டான் எலக்ட்ரான் ஆகியன உருவாகின.

பின்னர் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப்பின் அணுக்களின் ஈர்ப்பு விசை, வெப்பநிலை தணிதல் போன்ற காரணங்களால் தொடக்கத்தில் ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய அணுக்கருக்கள் உருவாகி, விண்மீன் கூட்டங்கள் உருவாக அடிப்படை காரணிகளாக (Protogalaxy) அமைந்தன. மேலும் மேலும் அணுக்கரு இணைவு, வெப்பம், குளிர்தல், ஈர்ப்பு விசை ஆகிய காரணங்களால் சுமார் 500கோடி ஆண்டுகளுக்குப்பின் விண்மீன்கூடங்கள் உருவாகி பின்னர் அவற்றில் நட்சத்திரங்கள் உருவாகியிருக்கும் என்பதும், நம் சூரியன் உருவாகி 1000கோடிஆண்டுகள் இருக்கும் என்பதும் வானவியலர் கருத்து.

விண்மீன் கூட்டங்கள் கொத்துக் கொத்தாதாக (Super cluster) அண்டவெளியில் ஈர்ப்பு விசையினால் குறிப்பிட்ட இடங்களில் பின்னி பிணைந்து கிடக்கின்றன. லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனபோதிலும் இன்னும் இந்த அண்டம் மேலும் மேலும் விரிந்து கொண்டுதானிருக்கிறது.

பெருவெடிப்பு கோட்பாட்டின் அறிவியல் உண்மைகள்:-

1. அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்கள், கிரகங்கள் துணைக்கோள்கள் அனைத்திலும் ஹைட்ராஜன், ஹீலியம், லித்தியம் கார்பன்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் நீக்கமர நிறைந்து பரிமளிப்பதானது, இவைகள் ஒரு ஆதிமூல சக்தியை அடிப்படையாக கொண்டு உருவானதை நிரூபிக்கும் அம்சமாகும்.

2. சூரியனைக் கிரகங்கள் சுற்றி வருவது போல் இந்த அண்டத்தின் எந்த ஒரு நட்சத்திரமாகட்டும் அல்லது நுண்ணிய அணுத்துகளாகட்டும் அதன் மையத்தில் ஒரு நியூக்கிலியசும் அதைச் சுற்றி எலெக்ட்ரான்களும் மின்னல் வேகத்தில் சுற்றி வருகின்றன. இதுவும் நமக்கு அண்டத்தின் அனைத்து அணுக்களும் ஆதியில் ஒரே தாய்க்கருவை அடிப்படையாகக் கொண்டே உருவாகியிருக்கக்கூடும் என்ற பெருவெடிப்பு கோட்பாட்டை நிரூபிக்கும் அம்சமாகும்.

3. ஒரு மங்கிய கதிர்வீச்சு அண்டத்தின் எல்லா திசைகளிலிருந்தும், குளிர்ந்த பின்னனியில் ஒரே சீராக வருவதானது பெருவெடிப்பு நிகழ்வின் எஞ்சிய கதிர்வீச்சை நமக்கு உணர்த்துகின்றன.

4. காஸ்மிக் கதிர்வீச்சின் வெப்பநிலையில் காணப்படும் 'சிற்றலைகளானது' விண்மீன் கூட்டங்கள் உருவாவதற்கு முந்திய நிலையிலிருந்த (Protogalaxy) அண்டக்கோளத்தின் அடர்த்தியில் காணப்பட்ட வேறுபாட்டினை உணர்த்துவதாகும்.

5. பூமியில் உள்ள உயிரினங்களைப்போல் அண்டக் கோளத்தில் நட்சத்திரங்களின் பிறப்பும் (Formation of supernova), நம் சூரியனைப் போல் வாலிபப்பருவம் அடைந்து, கடைசியில் அவைகள் ஒரு கருந்துகளாக (Block Hole) மாறி விண்மீன் கூட்டத்திலிருந்து விலகி அண்டத்தில் கலந்து எங்கோ ஓரிடத்தில் ஒதுங்கி கல்லரையாகி விடுவதும் விண்ணில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியாகும். அதே போல் அண்டப் பெருக்கத்தின் காலகட்டமும் ஒருநாள் முடிந்து, அது மீண்டும் ஒரு அணுத்துகளாக சுருங்கி மறைந்து போகக்கூடிய சாத்தியக் கூற்றையும் மறுப்பதற்கு இல்லை. அந்த காலகட்டத்தை வேண்டுமானால் வானவியலர்களால் அறுதியிட்டுக்கூற முடியாதிருக்கலாம். ஆனால் நடக்ககூடிய ஒன்று என்பது மட்டும் நிச்சயம்.

6. இப்பேரண்டத்தில் இதுகாறும் மனிதனால் கண்டறியப்பட்ட விண்மீன் கூட்டங்கள், பால்வீதிகள், விண்மீன்கள் கிரகங்கள் பற்றிய உண்மைகள் வெறும் 4% மட்டுமே. ஆய்வில் உள்ள டார்க் மேட்டர் எனப்படும் பருப்பொருள் 23%. நம்மால் அறியப்படாத சக்தி 73%. ஆக அண்டத்தைப்பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் கைமண் அளவே.

மாணிக்கவாசகரும் இந்த பேரண்ட உட்கூரியல் உண்மையினை 'இல் நுழை கதிரின் துன் அணு ஒப்ப' என்ற வரிகளில் பரந்த அண்ட கோள எல்லையில் அமைந்த எத்தனையோ கோடான கோடி தூசுகளில் இந்த உலகமும் ஒரு சிறு தூசு என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதன் மூலம் தமிழர்களின் அறிவியல் சிந்தனை எத்தகையது என்பதனை அறிந்து கொள்ளலாம். அத்தகைய சிந்தனையை நாமும் வளர்க்க 'இங்கேயும் ஒரு சொர்க்கம்' நாவலைப் படிப்போம்.