Sunday, January 6, 2008

என்னுடைய எழுத்துலகம்...

எனது கல்லூரி பட்டப் படிப்புக்கு பிறகு என் இளமைக்காலத்தை புத்தக நிலையங்கள், நூலகங்கள் என வருட கணக்கில் செலவிட நேர்ந்தது...

வளமான நூல்கள், போதுமான நேரம், சிந்திக்க இதமான சூழல் எனில், அச்சிந்தனைச் செழிப்பில் நம் கற்பனைத் திறன் கருக்கொள்ள இயல்பு போலும். அத்தகைய இன்சூழலில் ஏதாவது ஒன்றை எழுதவேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளும் முகிழ்த்தது...

ஒவ்வொருவருக்கும் அவர்கள் எழுத்து நடனமாட, அரங்கம் தேர்ந்த ஒன்றாகும் களம் புதுமையாகவும் இருக்க விரும்புவது இயற்கையே...அத்தகைய தேடுதலின் போது ஆங்கில நாவல்களை ஒப்பிடுகையில் தமிழில் பயண நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் தவிர்த்து வெளிநாடுகள் மற்றும் விஞ்ஞானம் பற்றிப் பேசிய தமிழ் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்...இது என் மனதை நெருடியதன் தாக்கமே "கனவுக் கிராமம்" எனும் நாவல் மலர காரணமாயிற்று...

என்னுடைய எழுத்துலக பயணத்திற்கு இதுவே முதல் வித்து...
அடுத்து தினத்தந்தியில் நாற்றாக வெளிவந்தது "மனிதாபிமானம்" என்ற சிறுகதை...

வரவிருக்கும் எனது இரண்டாவது நாவலான "இங்கேயும் ஒரு சொர்க்கம்" கிளைத்துப் பரவ வாசக அன்பர்களின் அபிமானம், பேருதவி புரியும் என எதிர்பார்க்கிறேன்...

4 comments:

நம்பி.பா. said...

வலையுலகில் உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

அறிவியல் நம்பி said...

நம்பி.பா. அவர்களின் வார்த்தைக்கு நன்றி ! நான் தொடர்ந்து எழுத இதுவும் ஒரு வினையூக்கியே !!

Anonymous said...

தங்கள் நாவலை படிக்க ஆர்வமாயிருக்கிறது. தங்களின் மின்னஞ்சல் முகவரியை அளிக்க முடியுமா?

அறிவியல் நம்பி said...

சிதம்பரம் அவர்களின் ஆர்வத்திற்கு நன்றி !
இதுவே எனது gmail முகவரி :
arivialnambi@gmail.com